A A
Sunday, August 1st, 2010



பிரிக்பீல்ட்ஸ்: மாறுகிறதா? மறைகிறதா?

ஆறு.  நாகப்பன்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் பிரிக்பீல்ட்ஸுக்கு வருகை தந்து ‘லிட்டல் இந்தியாவை’ அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பார் என்ற செய்தி பிரதமரால் அண்மையில் அறிவிக்கப்பட்டபோது கோலாலம்பூர் இந்தியர்கள் பூரித்துப் புல்லரித்துப் போனார்கள்.

பிரிக்பீல்ட்ஸ் மேம்பாட்டின் வாசலில் நுழைந்தது. 

தெருவோரச் சிறுகடைகள் அனைத்தும் பிரிக்பீல்ட்ஸ் சிறுதிடலில் அவசர அவசரமாக மாற்றப்பட்டன. பிரிக்பீல்ட்ஸ் பிரதான சாலை ஒரு வழியாக்கும் பணிகள் முடுக்கப்பட்டன.  

முதலீட்டைப் பெருக்கி வருமானத்தை உயர்த்துவோம்!

khalid சிலாங்கூர் மாநிலப் பொருளாதார வளர்ச்சியை மேலும் உயர்த்துவதற்குப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனச் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஸிரி காலிட் இப்ராகிம் தெரிவித்துக் கொண்டார்.

“இத்திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைய கூடிய விரைவில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களும் பேசப்படவுள்ளன.”

அரசியலில் ஆசிரியர்களா?….. எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!

images11 ஆகஸ்ட் முதல் நாளிலிருந்து டிஜி41, டிஜி48 பதவித் தரத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் கூறியது தொடர்பில் கருந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த அறிவிப்பில் “ஏதும் புதுமை இல்லை” எனக் கூறினர். இத்திட்டத்தின்வழி தேசிய முன்னணி மட்டுமே நன்மையடையும் என அவர்கள் கருத்துரைத்தனர்.

மாட்டுத்தலை வழக்கு

ஆறு. நாகப்பன்

சரியாக 11 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு 28ஆம் நாள் ஷாஆலாம் சட்டமன்றத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட மாட்டுத்தலை ஊர்வலத்தில் சம்பந்தப்பட்ட பன்னிரண்டு பேர் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.

வருது…ஆனா வரல்லே…!

ஆறு. நாகப்பன்

இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் 2009ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமான அந்நிய முதலீடுகளை மலேசியா பெற்றுள்ளது என்று அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறியுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏழைகளின் வாழ்க்கைத்தரம் இழிகிறது!

ஆறு. நாகப்பன்

மலேசியாவில் விலைவாசி பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. அரசியலால் கூட்டிக் கழிக்கப்பட்ட புள்ளிவிவரங்களே கிடைக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் கிடைத்த ஊதிய உயர்வைக் காட்டிலும் விலைவாசிகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.  அடித்தர, நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

சமய மன்றங்களை மூடுவது ஒரே மலேசியாவுக்கான மற்றுமொரு திட்டமா?

ஆறு. நாகப்பன்

bendera-malaysia மலேசியாவில் எல்லாருக்கும் ஒரே மொழிப் பள்ளி, சீனத் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலம் இல்லை, இப்பள்ளிகள் வாரியங்களை அமைத்துக் கொண்டு தங்களுக்குத் தேவையான நிதியைத் தேடிக் கொள்ள வேண்டும், இப்படியெல்லாம் ஒரே மலேசியா கல்வி அமைச்சரும் துணைப்பிரதருமான முகைதீன் யாசின் தொடர்ந்து அறிவித்து வந்துள்ளார். இந்த அறிவிப்புகள் அனைத்தும்  ஒரே மலேசியாவில் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற  குறியிலக்கை நோக்கிய செயல்பாடுகள் என்றே  நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

கெஅடிலானில் இன்னொரு மாற்றம்!

azminalilagi கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன. இன்று மற்றும் நாளை கூடவிருக்கும் கூட்டத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம், கட்சியை மேலும் வலுப்படுத்தவும் நோக்கத்தை அடையவும் இம்மாற்றங்கள் உதவும்.

Follow Us On…