A A
Tuesday, September 7th, 2010

மலேசிய மனித உரிமைக் கட்சி பேரரசருக்கு விண்ணப்பம்

Tue, Jul 13, 2010

செய்திகள்

ஆறு. நாகப்பன்

h.r.party 1 மலேசிய மனித உரிமைக் கட்சியும் ஹிண்ட்ராவும் இணைந்து இந்திய மாணவர்களுக்கான கல்வி உரிமைகளைக் கோரிப் பேரரசருக்கு மகஜர் ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் பேரரசரின் அதிகாரபூர்வ அரண்மனை வாயிலை அடைந்த பின் மகஜர் வழங்கப்பட்டது.

மலேசிய இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்று உயர்கல்விக் கழகங்களுக்கு விண்ணப்பம் செய்தாலும் தகுதி இருந்தும் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அண்மையில் நடந்த ம.இ.கா. பொதுப் பேரவையில் உரையாற்றிய பிரதமர் இவ்வாண்டு பொதுப் பல்கலைக்கழக இடங்களில் 7 % இந்திய மாண்வர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இது முற்றிலும் தவறான புள்ளிவிவரம். உண்மையில் 0.27 விழுக்காடு மட்டுமே இந்திய மாணவர்கள் இடம் பெற்றார்கள். இது அரை விழுக்காடு கூட இல்லை. கால் விழுக்காட்டைவிடச் சற்று அதிகம்” என்று பி. உதயக்குமார் கூறினார்.

h.r.party 2 மேலும் அவர் பேசும்போது “ 9ஏ பெற்ற எல்லா மாணவர்களுக்கும் பொதுச்சேவைத்துறை கல்விநிதி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இதனை பொதுச்சேவைத்துறை தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்தினார். இதற்காக 244 கோடி ரிங்கிட் செலவழிக்கப்பட்டது.  என்றாலும் 9ஏ. 10ஏ பெற்ற இந்திய மாணவர்கள் கூடக் கல்விநிதி பெறவில்லை.

பொதுச்சேவைத்துறைக் கல்விநிதி மட்டுமல்ல, பெட்ரோனாஸ், தேசிய வங்கி, மாரா, மற்றும் மாநில அறத்துறைகள், இப்படிப் பல அரசு நிறுவனங்கள் வழிக் கோடிக்கணக்கான ரிங்கிட் கல்வி உதவிநிதியாகவும் கடனாகவும் வழங்கப்படுகின்றன. இவற்றிலிருந்து உதவி பெறும் இந்திய மாணவர்கள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர் என்றும் பி. உதயக்குமார் கூறினார்.

பிரதமருக்கு எதிரான புகார்

p.uthaya கல்வித்துறையில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து நாடெங்கும் உள்ள காவல் நிலையங்களில் பிரதமர்,  துணைப்பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை தலைமை அதிகாரிகள் மீது 31 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் பேரரசருக்கு அனுப்புவதற்காக 14,000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் பி. உதயக்குமார் கூறினார்.

விண்ணப்பம்

பேரரசருக்கு வழங்கப்பட்ட மகஜரில் இந்திய மாணவர்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

1. 9ஏ பெற்ற இந்திய மாணவர்கள் அனைவருக்கும் மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இடம் வழங்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கல்வி உதவிநிதி வழங்க வேண்டும்.

2, பல்கலைக்கழக நுழைவுக்கு இப்போது இருக்கும் இரண்டு தேர்வு முறைகளை அகற்ற வேண்டும்.  அதாவது எஸ்.டி.பி.எம். தேர்வு, மெட் ரிகுலேசன் தேர்வு ஆகிய இரண்டில் எஸ்.டி.பி.எம். தேர்வை உடனடியாக அகற்ற வேண்டும். ஒரே மலேசியா, ஒரே தேர்வு என்பதே ஒரே மலேசியா கொள்கைக்கு ஏற்றது.

3. அரசியல் சட்டம் 8, மற்றும் 12 ஆகிய பிரிவுகள்  கல்வியில் பாகுபாடு கூடாது என்று வலியுறுத்துகின்றன. ஆனால் பாரிசான் அரசாங்கத்தின் நடைமுறையில் இந்தச் சட்டம் மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

4. கல்வி உதவிநிதி, பல்கலைக்கழகங்களில் இடம் ஒதுக்குதல் போன்ற பணிகளைச் செய்யும் அரசுத் துறைகளைக் கண்காணிக்க ஐக்கிய நாட்டுச் சபையின் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மலேசிய மனித உரிமைக் கட்சியினர் பேரரசருக்கு வழங்கிய விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 Comments For This Post

  1. maeganmala Says:

    SAYA TAKUT DAN TAK PASTI SEBELUM PILIHARAYA AKAN DATANG GOVERMENT KITA BOLEH BANKRAP TAK? KALAU PEMIMPIN GELAPKAN DUIT RAKYAT ………….. MINTA MAAF TAK TAHU NAK TERUSKAN OH TUHAN DIA YANG MAHA MENGETAHUI SEMUA

  2. cthevi Says:

    TODARNTHU PORATANGGAL NADATHUNGGAL SAGOTHARARE!
    ENGGAL AATHARAVU ENDRUM THANGGALUKKU UNDHU.

  3. Arivan Says:

    நியாயமான உங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.. நியாயமான போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு. தமிழர்களை ஒன்றுபடுத்துவதில் முனைப்புக் காட்டுங்கள். இயன்றால் அரசியல் கலவாத சமூக அமைப்பை உருவாக்கித் தமிழர்களுக்காகப் போராடுங்கள். திண்ணமாக வெற்றி கிடைக்கும்..

  4. குடிமகன் Says:

    மாண்புமிகு பிரதமர் அவர்கள் 9A வுக்கு மேல் மதிபீடுகள் பெற்ற எல்லா இந்திய மாணவர்களுக்கும் உபகாரச்சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை சொன்னால் மட்டும் போதாது.செயலிலும் செய்து காட்ட வேண்டும்.சொல்வது ஒன்று.செய்வது ஒன்றாக இருக்கக் கூடாது.கடந்த காலங்களில் தேசிய முன்னணியினர் சொல்வாக்கு தவறியுள்ளனர்.

  5. maeganmala Says:

    saya sokong HRP DAN SOKONG MIC SEBAB SEMUA PUN DALAM PARTI ITU INDIA
    TAPI HRP ITU SANGAT BERANI SEBAB ITU SOKONG 100% SAYA TAK PASTI BERAPA SAYA HARUS SOKONG MIC TAPI BERTERIMA KASIH KEPADA MIC YANG MAMPU TOLONG INDIA SIKIT TAPI TAK BERANI MACAM HRP

  6. 786 Says:

    மலேசிய மனித உரிமைக் கட்சியும் ஹிண்ட்ராவு syabassssss

  7. maeganmala Says:

    786 i agree with you syabas for hrp and hindraf tulen AT THE SAME TIME TQ FOR EVERYTHING FOR MIC

    KALTH ..INAL SEI..TA NAN..RI SIRI.. THENINUM

    NYA… LATHIL MA.. NAP PERI.. YATHU

  8. tamilvanan Says:

    மலேசிய மனித உரிமைக் கட்சியும் ஹிண்ட்ராப்பும் இணைந்து பேர‌ர‌ச‌ரிட‌ம் வ‌ழ‌ங்கிய‌ ம‌க‌ஜ‌ரின் மூல‌ம், எத்த‌கைய‌ ப‌ல‌ன் ச‌முதாய‌திற்கு கிடைக்கும்? அல்ல‌து ம‌க‌ஜ‌ர் வ‌ழ‌ங்கிய‌து வெறும் ஆத‌ங்க‌த்தை வெளிப்ப‌டுத்த‌வா?

  9. maeganmala Says:

    kita kena cuba dan cuba sekurang-kurangnya satu dunia tahu apa yang berlaku untuk orang untuk orang india di Malaysia
    Dasar Apartheisd di africa selatan ambil masa yang lama NELSON MANDELA IS A GOD IN HUMAN HE IS GREAT MAHATMA COMPARE TO GHANDHI AT LAST SUCCEED AT LEAST HINDRAF AND HRP GOT GUTS TO DO THAT.

  10. maeganmala Says:

    HINRAF AND HRP LET THE SPECIAL NEED PERSONS TO GIVE MEMORANDUM TO KING IS GOOD BECAUSE SPECIAL NEED ISSUES ALSO LOTS AND LOTS SOME NGOS WHICH RUN BY NORMAL PEOPLES LOTS OF BIG SHORTS IN IT
    AND THEY MAKE SURE THE ROYAL FAMILY BECOME THEIR PATRON.

  11. nimo Says:

    saya sokong semua parti yang membela nasib rakyat india di negara 1 malaysia

  12. maeganmala Says:

    mr sooriyan so far mic do little bit for indians and other party got wayang for indians ipf not sure about their impact to indians
    HRP got good records for helping very poor indians and willing to take risk even other party members like manoharan from dap ghanabathy rao FROM DAP ASP vasatha kumar because of hindraf they shine hindraf got good impact for indians and also for the last elections where BN LOST 4 STATES
    IT WILL BE DAY DREAM IF ANOTHER PARTY GOING TO HELP INDIANS OTHER THAN MIC AND HRP OR HINDRAF UTHAYAKUMAR AND WAYTHAMOORTHI MAY BE LOT OF PROMISES FOR INDIANS CAN GET FROM DAP PPP GERAKAN KEADILAN ALL
    MUNGKIN JANJI-JANJI AIR LIUR SAHAJA HARAP JANGAN PERCAYA JANJI-JANJI AIR LIUR. SEBELUM PILIHARAYA SEMUA BOLEH UMNO ANWAR AH ENG AH SIANG SEMUA SAMA

Leave a Reply

Follow Us On…