A A
Tuesday, September 7th, 2010

மனித உரிமை மீறல்: ஐ.நா. பேராளருடன் சந்திப்பு

Wed, Jul 21, 2010

செய்திகள்

ஆறு. நாகப்பன்

மலேசிய மனித உரிமைக் கட்சி மலேசியாவில் அண்மைக்காலத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த விண்ணப்பம் ஒன்றினை இன்று மதியம் மணி 2.00 வாக்கில் மலேசியாவுக்கான ஐக்கிய நாட்டுச் சபையின் பேராளர்களிடம் வழங்கியது.

jeyathas 2  மலேசியாவில் இந்திய மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவிகள் மறுக்கப்பட்டதையும் மெட்ரிகுலேசன் வகுப்புகளீல் இந்திய மாணவர்களுக்கு இடம் வழங்கப்படாததையும் குறிப்பிட்டு மலேசிய மனித உரிமைக் கட்சியின் தலைவர் ஜெயதாஸ் தலைமையிலான குழுவினர் இன்று ஐக்கிய நாட்டுச் சபையின் மலேசியப் பேராளர்களிடம் விண்ணப்பம் ஒன்றினை வழங்கினர்.

மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 26, கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மலேசியக் குடிமக்களுக்கிடையில் பாகுபாடு கூடாது என்று தெளிவாக வரையறை செய்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த விதி செயல்படுத்தப்படுவதில்லை. அரசு சார் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்கங்களிலும் இன அடிப்படையிலான பாகுபாடு நடைமுறைக் கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து இந்திய சமூக அமைப்புகள் இவ்வாண்டுத் தொடக்கம் முதல் கடுமையாகக் குரல் எழுப்பி வருகின்றன. மலேசிய மனித உரிமைக் கட்சி பேரரசரிடம் விண்ணப்பம் கொடுப்பது உட்பட பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

மலேசியாவில் கல்வித்துறையில் காட்டப்படும் பாகுபாடு மலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல,   ஐ.நா. சபையின் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்திற்கும் எதிரானது என்று ஜெயதாஸ் கூறினார்.

Leave a Reply

Follow Us On…