A A
Tuesday, September 7th, 2010

கூரைகள் பறந்ததற்கான காரணத்தைச் சிலாங்கூர் ஆராயும்!

Thu, Jul 22, 2010

செய்திகள்

Iskandar புக்கிட் புரோந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசா வீடுகளின் கூரைகள் பறந்தது தொடர்பில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தை விசாரிக்கும்படி சிலாங்கூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வீட்டுக் கூரைகள் பாதுகாப்பான நிலையில் உள்ளதா என உறுதிப்படுத்தவே இவ்விசாரணை செய்யப்படுகிறது.

 ”கனத்த மழையின் காரணத்தால் இப்பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளின் கூரைகள் பறந்தன. இதன்  தொடர்பில் இத்தகைய விசாரணை செய்யப்படுகிறது” என ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டார் அம்துல் சாமாட் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற உலு சிலாங்கூர் இடைத் தேர்தலின் போது, மத்திய அரசு இந்த வீட்டுக் கூரைகளை மாற்றியமைத்தது. ஏறக்குறைய 57 குறைந்த விலை அடுக்குமாடி வீடுகளுக்கு டத்தோஸிரி நஜிப் துன் ராசாக் தலைமையில் கூரைகள் மாற்றப்பட்டன.

“ஆகவே மத்திய அரசும் இதன் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். புக்கிட் புரோந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசாவில் வாழுகின்ற மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும் இதில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என இஸ்கண்டார் அம்துல் சாமாட் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Follow Us On…