A A
Friday, September 10th, 2010

மாட்டுத்தலை வழக்கு

Tue, Jul 27, 2010

செய்திகள்

ஆறு. நாகப்பன்

சரியாக 11 மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு 28ஆம் நாள் ஷாஆலாம் சட்டமன்றத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட மாட்டுத்தலை ஊர்வலத்தில் சம்பந்தப்பட்ட பன்னிரண்டு பேர் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதிக்கப்பட்டது.

kepala lembu 1 ஷாஆலாம் செக்சன் 19லிருந்து செக்சன் 23க்கு ஓர் இந்துக் கோயில் இடம் மாற்றப்படவுள்ளது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து செக்சன் 23ஐச் சேர்ந்த மலாய்க்காரர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பின் உச்சகட்டமாக வெட்டப்பட்ட மாட்டின் தலையை எடுத்துக்கொண்டு 50க்கும் மேற்பட்டோர் ஷாஆலாமில் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கட்டடத்தின் முன் கூடினர்.

மாடு இந்துக்கள் புனிதமாகக் கருதும் விலங்கு. அதன் தலையைத் துண்டித்துத் தூக்கி வந்தததோடு அதனைக் கீழே போட்டு ஆர்பாட்டக்காரர்கள் கால்களால் மிதித்தனர். சிலர் அதன் மீது சிறுநீர் கழிப்பதுபோல் பாவனையும் செய்தனர்.

இதனை எதிர்த்த  இந்திய அரசு சாரா இயக்கங்கள் காவல்துறையில் 52 புகார்கள் செய்தன.

இப்புகார்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவில்  இன்று ஷாஆலாம் செஷன் நீதிமன்றம் குற்றவாளிகளுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் தண்டம் விதித்துத் தீர்ப்பு கூறியது.

2 Comments For This Post

  1. cthevi Says:

    aha! migap piramaathamaana theerpu? ithaiye matra mathathinar seithirunthaal??
    ennip paarkave nenjam nadunggugirathu.
    illicha vaayargal…naam…thaano??

  2. குடிமகன் Says:

    RM 1000 அபராதம் மட்டும் போதாது.எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமலிருக்க சற்றுக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இதுவே மற்றவர்கள் இதுபோன்ற அநாகரிமான செயலில் ஈடுபடவிடாமல் எச்சரிக்கும்.

Leave a Reply

Follow Us On…